ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், சுனில் ஷெட்டி, கதாசிரியர் கலைஞானம், நடிகர் அருண்விஜய், விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இது சாதாரண 'தர்பார்' அல்ல காட்டு 'தர்பார்' - நடிகர் விவேக் - ரஜினியின் தர்பார்
சென்னை: அடிமட்டத்தில் இருக்கும் ஒருவர் மேல வர வேண்டும் என்றால், ரஜினியின் வசனங்கள் போதுமானது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
இந்த விழாவில் நடிகர் விவேக் பேசுகையில், ‘இந்த இசை விழாவின் நாயகன் அனிருத். பாட்ஷா படத்தில் ஒரு வசனம் இருக்கும் நாடி நரம்பு ரத்தம் எல்லாவற்றிலும் வெறி இருப்பவர்கள் தான் இப்படி செய்ய முடியும்.
அனிருத் அந்த மாதிரி ஒரு இசையை 'தர்பார்' படத்தில் கொடுத்துள்ளார். இது சாதாரண தர்பார் அல்ல காட்டு தர்பார். போஸ்டரை பார்க்கும்போது மூன்று முகம் படத்தில் பார்த்த ரஜினியை விட பிரகாசமாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக அவர் மட்டுமே அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துள்ளார். அடிமட்டத்தில் இருப்பவன் மேல வரனும் என்றால் ரஜினியின் வசனங்கள் போதும் அது கொடுக்கும் எனர்ஜி வேற லெவல்’ என்றார்.