நடிகர்கள் அனில் கபூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஏகே வெர்சஸ் ஏகே’ (AK VS AK). நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த 24ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஏகே வெர்சஸ் ஏகே’ படத்தைப் பாராட்டிய ’ஸ்லம்டாக் மில்லியனர்’ - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
சென்னை: ’ஸ்லம்டாக் மில்லியனர்’ பட இயக்குநர் ’ஏகே வெர்சஸ் ஏகே’ படத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏகே வெர்சஸ் ஏகே
இந்நிலையில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பட இயக்குநர் டேனி பாய்ல், 'ஏகே வெர்சஸ் ஏகே’ படத்தை தற்போது பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் ”எனக்கு 'ஏகே வெர்சஸ் ஏகே' படம் மிகவும் பிடித்துள்ளது. இப்படம் மனிதனின் ஈகோவையும், அவர்களது இமேஜ் குறித்து பேசுகிறது. உண்மையில் 'ஏகே வெர்சஸ் ஏகே' ஒரு மகிழ்ச்சியூட்டம் திரைப்படமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.