உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில், 25ஆவது படமாக உருவாகியுள்ள படம் 'நோ டைம் டூ டை'. இதில் டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஐந்தாவது முறையாக பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் கரோனா அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது கனவு பாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் ஒரு பத்திரிகையாளர் சிறு வயதில் இருந்தே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போன்று ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என நினைத்ததுண்டா என கேள்வி எழுப்பினார்.