தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ராயப்பன்... மைக்கேல்... பிகிலை காண வெறித்தனமாக காத்திருக்கும் 'பிகில்' வில்லன்! - பிகில் தீபாவளி
'பிகில்' திரைப்படத்தில் மூன்று கெட்டப்களில் வரும் விஜய்யை காண ஆர்வமுடன் இருப்பதாக 'வடசென்னை ராஜன்' தம்பி ட்வீட் செய்துள்ளார்.
மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி விருந்தாக நாளை (அக்.25 ) இப்படம் வெளியாகிறது.
விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது, ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகியோரை அக். 25ஆம் தேதி திரையில் காண காத்திருக்கிறேன் என டேனியல் பாலாஜி பிகில் படப்பிடிப்பில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.