அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'பிகில்'. இதில் யோகி பாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல தனியார் சேனலில் ஒளிப்பரப்பப்பட்டது.
இதில், படத்தின் வில்லனாக நடித்திருந்த டேனியல் பாலாஜியின் பேச்சின் ஒருபகுதியை கட் செய்து ஒளிப்பரப்பப்பட்டதாக அவர் ஆதங்கம் தெரிவித்தார். அப்படி அவர் என்ன பேசினார் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கோரிக்கைவிடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக டேனியல் பாலாஜி தனது சமூக வலைதளத்தில் பேசியதை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் என் உரையில் நான் சொன்னது, விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர், எனக்கு ஒரு நல்ல நண்பர், பெற்றோருக்கு ஒரு நல்ல மகன், அதேபோல் அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர், விரைவில் வருவார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:#BigilAudioLaunch: 'வாழ்க்கையில் நீங்க நீங்களா இருங்க'- 'பிகில்' விஜய்யின் அட்வைஸ்!