பாலிவுட்டில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'தபாங்'. சிம்பு நடித்திருந்த 'ஒஸ்தி' இதன் ரீமேக் தான். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட, மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார்.
Hud Hud Dabangg - சாமியார்களுடன் குத்தாட்டம் போட்ட சல்மான்! - சோனாக்ஷி சின்ஹா
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தபாங் 3' படத்தின் 'ஹட் ஹட்' (Hud Hud) எனும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Dabangg 3 video song
கான் குழுவினர் தயாரித்துள்ள இப்படத்துக்கு சாஜித் வாஜித் இசையமைத்துள்ளனர். இதன் பாடல்கள் வெளியாகி பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'ஹட் ஹட்' (Hud Hud) எனும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதை சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதையும் படிங்க:'அவெஞ்சர்ஸ்' ஸ்டைல் என்ட்ரியில் 'ஆக்ஷன்' பார்க்க அழைப்பு விடுத்துள்ள தமன்னா!