பாலிவுட்டில் 2010ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் 'தபாங்'. இப்படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'தாபாங் 2' அர்பாஸ் கான் இயக்கினார்.
தமிழில் வருது தபாங்... எப்ப வருதுன்னு தெரியுமா...! - பிரபுதோவா
தபாங் 3 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
dhabang
இந்நிலையில், இப்படத்தின் 3ஆம் பாகமான 'தாபாங் 3' படத்தை நடிகர் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கி வருகிறார். 'தபாங் 3' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமையை கே.ஜே.ஆர் பட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.