நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக #D40 பெயர் வைத்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார்.
#D40 படப்பிடிப்பை முடித்த தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் #D40 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
d40
அதேபோல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். அதேபோல் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: தனுஷை சந்திக்க லண்டன் பறந்த மாரி செல்வராஜ்!