'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்ஜின் இயக்கத்தில் #D40 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ முக்கித்தோற்றத்தில் நடிக்கிறார்.
#D40 என்னும் தற்காலிக பெயரில் உருவாகி வரும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.