வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அசுரன்’. இதில் அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், டீஜே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக். 4ஆம் தேதி வெளியானது.
எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் D40 படக்குழுவினருக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.