தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். 2001ஆம் ஆண்டு ’தமிழன்’ திரைப்படத்தில் முலம் தனது இசை பயணத்தை தொடங்கினார். மிகக் குறைந்தக் காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கும்கி படத்தில் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.இதற்காக இவருக்கு சிறந்த இசையமைபாளருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு இமான் தொட்ட படங்கள் எல்லாம் ஹிட். மண் மணம் மாறாமல் அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ‘மைனா’, ‘வெள்ளக்கார துரை’ என பல ஹிட் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக இடம்பிடித்தார்.
தேசிய விருது
இந்நிலையில் அவர் ’டிக்டிக்டிக்’ படத்தோடு தனது 100 படத்தை நிறைவு செய்தார். பின்னணி இசை மட்டுமின்றி பல படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களையும் பாடி உள்ளார். பிரபலமான டிவி சீரியல் டைட்டில் சாங்கிற்கும் இவர் இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய 5ஆவது தமிழ் இசையமைப்பாளர் இமான் தான்.தற்போது வரை 100க்கும் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
தற்போதும் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனது இசையில் மட்டுமின்றி யுவன்சங்கர் ராஜா போன்ற பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியுள்ளார். கடைசியாக இவர் இசையமைத்துள்ள அண்ணாத்த படம், ரஜினிக்காக இவர் இசையமைத்த முதல் படமாகும்.