சி.வி. குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'மாயவன்'. இதில் , லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப் ,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சி.வி. குமார் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
'மாயவன் ரீலோடட்' படத்தில் ஒப்பந்தமான நடிகர் சந்தீப் கிஷன் - நடிகர் சந்தீப் கிஷன்
'மாயவன் ரீலோடட்' படத்தின் நாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மாயவன் இந்தியில் டப் செய்யப்பட்டு அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கிடைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமான 'மாயவன் ரீலோடட்' இயக்கவுள்ளதாக சி.வி. குமார் அறிவித்துள்ளார்.
இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த படத்திலும் சந்தீப் கிஷனே நாயகனாக நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷனின் பிறந்தநாளான இன்று (மே 7) இந்த அறிவிப்பை சி.வி. குமார் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் உருவாகிறது. இதில் நடிக்கும் கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு தொடங்கும் நாள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.