மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு மாதுகுட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான படம் 'ஹெலன்'. நடிகை அன்னா பென், நடிகர் லால் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரேவற்பை பெற்றிருந்தது. இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் 'ஹெலன்' மலையாளப்படத்தை 'அன்பிற்கினியாள்' என தமிழில் ரீமேக் செய்துள்ளார். அப்பா - மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா - மகள் நடித்தால் எப்படியிருக்கும்...? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என நினைத்து நடிகர் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவரையும் கோகுல் நடிக்கவைத்துள்ளார். கோகுல் இயக்கிய இப்படத்தினை நடிகர் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.