தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினிகாந்த், சிவக்குமார் என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இதற்கிடையில் இவருக்கு கடந்த 1983ஆம் ஆண்டு கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை ஜெயசித்ராவின் கணவர் இன்று (டிச. 04) உடல்நலக் குறைவு காரணமாக திருச்சியில் உயிரிழந்தார்.