இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ள படம் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'. 'கயல்' ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ஶ்ரீஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியாகும் முன்பே இப்படத்தின் ப்ரிவியூ பார்த்த விமர்சகர்கள் இதை பாராட்டி வருகின்றனர்.
விமர்சகர்கள் பாராட்டும் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'! - கமலி ஃப்ரம் நடுக்காவேரி லேட்டஸ் ரீலிஸ் தேதி
சென்னை: 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
Kamali
கமலி என்ற பெண் சாதாரண கிராமத்தில் இருந்து வந்து சென்னை ஐஐடியில் படித்து எப்படி சாதித்தார் என்பதை மிகவும் அற்புதமாக இயக்குநர் சொல்லியுள்ளார். கல்வி அனைவருக்குமானது. முயற்சி செய்து படித்தால் யாரும் எங்கிருந்து வந்தாலும் சாதிக்கலாம் என்று இப்படம் பேசுகிறது. பிப்ரவரி19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: கனவுகள் மெய்ப்பட பிப்ரவரியில் வருகிறாள் கமலி!