தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தன்னைத்தானே மணந்துகொண்ட மாடல் அழகி! - latest cinema news

மாடல் அழகி கிரிஸ் கேலரா தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் அழகி
மாடல் அழகி

By

Published : Sep 9, 2021, 9:56 AM IST

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மாடல் அழகி கிரிஸ் கேலரா (33). இவர் தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இனிமேல் தனியாகவே வாழ்ந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் தனியாக வாழ நினைத்த கிரிஸ் பிரேசிலில் உள்ள பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னைத்தானே சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இதில் அவரது நண்பர், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாடல் அழகி

இது குறித்து கிரஸ் கூறுகையில், "என் வாழ்க்கையில் நான் தனியாக இருக்க பயப்படுவேன். ஆனால் இப்போதுதான் தனியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

அதனால்தான் என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். இந்த உணர்வு மிகவும் அற்புதமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

மாடல் அழகி

ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு ஒன்றும் புதிதாக நடைபெறுவது இல்லை. இதற்கு முன்னதாக இதேபோன்று கடந்த ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details