தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் உருவாகியுள்ள 'ஷித்தி' - ஷித்தி திரைப்பட இசை வெளியீட்டு விழா

சென்னை: கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்புடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன்  'ஷித்தி' (Siddy) திரைப்படம் உருவாகியுள்ளது.

ஷித்தி
ஷித்தி

By

Published : Aug 21, 2021, 11:05 PM IST

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் திரில்லர் படம் 'ஷித்தி' (Siddy).
பயஸ் ராஜ் எழுதி இயக்கும் இப்படத்தில் மலையாள திரையுலகின் இயக்குநரும் நடிகருமான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். அஜிஜானுடன் விஜயன், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ், தனுஜா கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சூர்யா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.
'ஷித்தி' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கோவளம், திருவனந்தபுரம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கொச்சியில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details