தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இர்பான் பதானுக்கு குவியும் பாராட்டு! - latest cinema news

சென்னை: ‘கோப்ரா’ படத்தில் சிறப்பாக நடித்துவரும் இர்பான் பதானுக்கு, கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோப்ரா
கோப்ரா

By

Published : Jan 11, 2021, 4:51 PM IST

’இமைக்கா நொடிகள்’ படத்தையடுத்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடிக்கும் இப்படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் காவல் துறை அலுவலராக நடிக்கிறார். இதற்கிடையில், ‘கோப்ரா’ படத்தின் டீசர் நேற்று(ஜன.10) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விவிஎஸ். லட்சுமணன் வெளியிட்ட பதிவு

தொடர்ந்து முதல்முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இர்பான் பதானின் நடிப்பை கண்டு கிரிக்கெட் வீரர்கள் விவிஎஸ்.லட்சுமணன், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கணக்கு வாத்தியாராக விக்ரம் - ’கோப்ரா’ பட டீசர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details