சென்னை: பல் மருத்துவமனைக்கு சென்ற கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், காமெடி கிங் கவுண்டமணியை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணிய பத்ரிநாத்,
பல் மருத்துவரை சந்திக்க சென்ற அந்த தருணம் இனிமையாக மாறியது. தமிழ் சினிமாவில் புகழ்பொற்ற நகைச்சுவை நாயகனான கவுண்டமணியை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா" என்று கவுண்டமணியின் மிகவும் பிரபலமான வசனத்தையும் பதிவிட்டுள்ளார்.
கூலிங்கிளாஸ் அணிந்தவாறு மிகவும் ஸ்டைலாக கவுண்டமணியும், அருகில் அரைடவுசருடன் பத்ரிநாத்தும் நிற்கும் இந்தப் புகைப்படத்துக்கு ரசிகர்கள் பல சுவாரஸ்யமான கமெண்டுகளையும், மீம்ஸ்களையும் நிரப்பி வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2013 வரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் பத்ரிநாத். சென்னை அணி பல போட்டிகளில் வெல்ல காரணமாக இருந்தவர். பின்னர் 2015ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணி (ஆர்சிபி) அவரை ஏலம் எடுத்தது. இதையடுத்து 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது வர்ணனையாளராக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.