சென்னை: கரோனா தொற்று வராமல் இருக்க தயவு பண்ணி யாரும் வெளிய வராதீக என்று கைகூப்பி கெஞ்சியுள்ளார் காமெடி நடிகர் வடிவேலு.
இதுதொடர்பாக நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில்,
"ரொம்ப மனசு வேதனையோட, துக்கத்தோட சொல்றேன், தயவு பண்ணி எல்லாபேரும் கவுர்ண்மெண்ட் நமக்கு சொல்ற அறிவுர படி, இன்னொம் கொஞ்ச நாளக்கி வீட்ல இருக்க சொல்றாக.
மருத்துவ உலகமே திரண்டு இன்னிக்கி தன்னோட உயிர பணயம் வச்சு எல்லாரையும் காப்பாத்திட்டு இருக்காக. அவுகளுக்கு நாம ஒத்துழைப்ப கொடுக்கனும்.
அதுபோக காவல்துறை அதிகாரிங்க காவல் காத்து நாம எல்லோரையும் பாதுகாக்குரதுக்கு, தயவு பண்ணி வெளில வராதீகன்னு போலீஸே கும்புடற அளவுக்கு இருக்கு இன்னிக்கி.
யாருக்காக இல்லயோ, நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம புள்ள குட்டிகளோட உசுற காப்பாத்துறதுக்காக நாம எல்லாரும் வீட்ல இருக்கனும்.
தயவு பண்ணி யாரும் வெளில போகாதீக. யாரும் அசால்டா இருக்காதீக. ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி யாரும் வெளிய வராதீக.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Vadivelu demands public not to come outside இதையும் படிங்க:'கரோனா மாதிரி திடீர், திடீர்னு கிளப்புறாங்க'- போலி கணக்கு குறித்து வடிவேலு!