இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு டிவி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழுக்குஇதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சஷி மிட்டல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "அரசு அறிவுறுத்தியது அனைத்துமே எங்களுக்கு புதிதாக இருந்தது. படக்குழுவுக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பே பயிற்சி கொடுத்தோம்.