தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கோவிட் -19: தாராளமாக நிதியுதவி கொடுத்த பிரியங்கா சோப்ரா! - Nick Jonas latest news

நடிகை பிரியங்கா சோப்ரா கோவிட்-19 வைரஸால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க நிதியுதவி கொடுத்துள்ளார்.

priyanka chopra
priyanka chopra

By

Published : Mar 31, 2020, 2:20 PM IST

கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் திரை பிரபலங்களும் இந்தக் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

மற்றொரு பக்கம் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா நோயால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க நிதியுதவி வழங்குகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனஸும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நிதியுதவி கொடுத்துள்னர். அதுமட்டுமின்றி ‘யுனிசெஃப்’, ’பீடிங் அமெரிக்கா’ உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளுக்கும் அவர்கள் நிதியுதவி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த உலகத்திற்கு தற்போது நம்முடைய உதவி தேவை. மேலே கூறிப்பட்டுள்ள அமைப்பு மூலம் உணவின்றி தவிக்கும் அனைவருக்கும் உணவு கிடைக்கிறது. எந்த நன்கொடையும் சிறியது இல்லை. அதனால் அனைவரும் இணைந்து உதவுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா தற்காப்பு நடவடிக்கைகள் - யுனிசெஃப் தூதராக திரிஷா தரும் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details