தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனா ஊரடங்கு : 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விழாவை ஒத்திவைக்க ஆலோசனை - 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா

இந்த ஆண்டு வரவிருந்த முக்கியத் திரைப்படங்களின் வெளியீடு கரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவின் தேதியை தள்ளிவைக்க, ஆஸ்கர் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

By

Published : May 20, 2020, 8:31 PM IST

த அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் எனப்படும் ஆஸ்கர் கமிட்டி, கரோனா ஊரடங்கின் காரணமாக, 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை ஒத்தி வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆஸ்கர் வழங்கும் தேதியில் மாற்றமிருக்கும் என்றும், மற்றொரு தரப்பினர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழக்கமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம் முதல் சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் பிரிவுகளை ஒன்றிணைத்து 23 பிரிவுகளாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக அதிக பொருட்செலவில் தயாரான ’நோ டைம் டு டை’, ’டாப் கன் மார்விக்’, ’ப்ளேக் விடோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :உச்சத்தில் ஆஸ்கர் ஃபீவர்: விருதுகளை அள்ளப்போகும் திரைப்படங்கள் எவை?

ABOUT THE AUTHOR

...view details