ஹைதராபாத்: பாலிவுட் நடிகர்கள் அடுத்தடுத்து கரோனா பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது அர்ஜுன் ராம்பாலுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டிருந்த பூமி பெட்னேகர் தற்போது குணமாகியுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி லேசாக இருப்பதாக தெரிவித்தார் பூமி பெட்னேகர். இதைத்தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
பத்து நாள்களுக்கு பிறகு தற்போது குணமாகி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
நோ கரோனா. தனிமைப்படுத்தல் முடிந்துவிட்டது. தற்போது நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆரோக்கயமாக உள்ளேன். வாழ்க்கை குறித்து பசிடிவாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் மிஸ்டர் லீலி படப்பிடிப்பில் விக்கி கெளசாலுடன் இருந்தார் பூமி பெட்னேகர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் நோய் தொற்று உறுதியானது. தற்போது நடிகை பூமி பெட்னேகர் குணமாகிவட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மற்றொரு பாலிவுட் நடிகரான அர்ஜுன் ராம்பால் தனக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளேன். என்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளேன். தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வருகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகவும் தீவரம் அடைந்துள்ள நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுவரை நீல் நிதின் முகேஷ், சோனு சூட், மனீஷ் மல்கோத்ரா, கத்ரீனா கைஃப், அக்ஷய் குமார், கோவிந்தா, பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா என பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று உறுதி; மனநிலை அதை விட உறுதி - சோனு சூட்