மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திய பின்பு கரோனாவில் இருந்து மீண்டு வருவதாக ஹாலிவுட் நாட்டுப்புற பாடகி காளி ஷோர் (Kalie Shor) கூறியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதர அமைப்பு கூறியுள்ளது. ஹாலிவுட் பிரபலங்களான டாம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன், இட்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.
இவர்களையடுத்து ஹாலிவுட் நாட்டுப்புற பாடகி காளி ஷோர் (Kalie Shor) கரோனா தொற்றுக்கு ஆளாகி தற்போது மீண்டு வருவதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில், "கரோனாவால் நான் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். தற்போது நன்றாகி வருகிறேன். ஆனால் இது எந்த அளவுக்கு ஆபத்தான தொற்று நோய் என்பதற்கு நான் சான்று. ஆனாலும் மக்கள் இது குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சில நாட்கள் மிகவும் கொடுமையானவை. இதற்கு முன்பு நான் அப்படி உணர்ந்ததில்லை. என் உடல் முழுவதும் வலி ஏற்பட்டது. காய்ச்சலில் பாதிக்கப்பட்ட எனக்கு சுவை, வாசனை போன்ற உணர்வுகள் இல்லாமல் போனது" என்று பதிவிட்டுள்ளார்.