தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்தியன்-2' படத்திற்காக மீண்டும் கமலுடன் இணையும் ஆடை வடிவமைப்பாளர்! - கமல்ஹாசன்

'கபாலி', 'வட சென்னை' போன்ற திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்த அம்ரிதா ராம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'இந்தியன்-2' படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

costume designer amrita ram to work in Indian 2

By

Published : Oct 29, 2019, 8:08 PM IST

பிரபல தொலைக்காட்சி தொடரான 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் நிகழ்ந்த சர்ச்சைகள் மக்களால் பேசப்பட்டன. அதைத்தாண்டி நடிகர் கமல்ஹாசனின் உடையலங்காரமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த உடைகளை நடிகருக்காகவே பார்த்துப்பார்த்து வடிவமைத்தவர் அம்ரிதா ராம் எனும் ஆடை வடிவமைப்பாளர்.

அம்ரிதா ராம், நியூயார்க் நகரத்திலுள்ள பேஷன் இன்ஸ்டியூட்டில் காஸ்ட்யூம் டிசைனிங் படித்து, பின் மிஷ்கினுடைய 'முகமூடி' திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானார். 'கபாலி', 'வட சென்னை' போன்ற திரைப்படங்களுக்கும் ஆடை வடிவமைப்புச் செய்தார்.

தற்போது, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'இந்தியன்-2' படத்திற்கும் அம்ரிதா ஆடை வடிவமைப்பு செய்கிறார். இவர் 'விஸ்வரூபம்-2' திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’அசுரன்’ படத்தை பார்த்த ஷாருக் - சொன்னது இதுதான்?

ABOUT THE AUTHOR

...view details