தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கரோனாவும் கடந்து போகும்; விரைவில் தீர்வு காணலாம்' - டாம் ஹாங்க்ஸ் - கரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை

"இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளப் போகிறோம். ஆனால் நாம் ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து சில வசதிகளை விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும். இதற்கு தீர்வு காணலாம்"

Tom Hank
Tom Hank

By

Published : Mar 23, 2020, 10:36 PM IST

கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இருக்கும் பிரபல தம்பதியினர் டாம்ஹாங்க்ஸ் - ரீட்டா வில்சன் நலம் பெற்று வருவதாக டாம் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் 'Forrest Gump', 'Catch Me If You Can', 'The Terminal', 'Captain Phillips', 'The Da Vinci Code' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டாம் ஹாங்ஸ்.

புதிய படத்தின் படப்பிடிப்புக்காக டாம் ஹாங்ஸ், தனது மனைவி ரீட்டா வில்சனுடன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு சென்ற அவர்களுக்கு கரோனோ தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதனால் அவரையும் அவரது மனைவியும் பாதுகாப்பு கருதி சிகிச்சைக்காக தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை குறித்து டாம்ஹாங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது கரோனாவிலிருந்து உடல்நலம் தேறிவருவதாக டாம் ஹாங்கஸ் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது, "ஹலோ நண்பர்களே, எங்களுக்கு அறிகுறி ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். இவ்வாறு தனிமையில் இருப்பதைத் தான் அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

நீங்கள் கரோனாவை யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இது தான் பொது அறிவு. இல்லையா? இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளப் போகிறோம். ஆனால் நாம் ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து சில வசதிகளை விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும். இதற்கு தீர்வு காணலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details