உலகளவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நாடுகளுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்காகவும் முகக் கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கி வருகின்றனர்.
ரியல் ஹீரோக்களை நாம் ஆதரிக்க முடியும் - கரோனாவுக்கு நன்கொடை வழங்கிய அர்னால்டு! - Coronavirus concerns
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சிக்கு உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர்களை நன்கொடையாக அர்னால்டு வழங்கியுள்ளார்.
![ரியல் ஹீரோக்களை நாம் ஆதரிக்க முடியும் - கரோனாவுக்கு நன்கொடை வழங்கிய அர்னால்டு! Arnold](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6542204-352-6542204-1585149935960.jpg)
இதன் ஒரு பகுதியாக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது, இதற்காக நிதி திரட்டவும் ஆரம்பித்துள்ளார். இது குறித்து அர்னால்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாம் இருக்கும் இடத்திலிருந்து ஒரு விஷயத்தை குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. இது போன்ற நேரத்தில் நாம் அனைவரும் நமது பங்கை செய்யவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மருத்துவமனையில் இருந்து நம்மை பாதுகாக்கும் ரியல் ஹீரோக்களுக்கு ஆதரிக்கும் ஒரு எளியவழி இதுவாகும். நான் ஒரு மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்குகிறேன். இந்த ஹீரோக்களை ஆதரிக்க நம் அனைவராலும் முடியும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.