தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தனர்.
இருப்பினும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷின் பெயரை நீக்காமலேயே வைத்திருக்கிறார், ஐஸ்வர்யா.
இருவரையும் மீண்டும் இணைத்து வைக்கப்பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.