தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'முழு அடைப்பு நீடித்தால் அரசு இதை செய்யவேண்டும்' - இயக்குநர் ஜனநாதன் - இயக்குநர் ஜனனாதன்

தமிழ்நாட்டில் முழு அடைப்பு நீடிக்கப்பட்டால் திறந்திருக்கும் நேரத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என இயக்குநர் எஸ்.பி.ஜனனாதன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SPJ
SPJ

By

Published : Apr 27, 2020, 4:51 PM IST

கரோனா அச்சம் காரணமாக மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி இன்று (ஏப்.27) அனைத்து மாநில முதலமைச்சர்களையும் வீடியோ கான்ஃபெரென்ஸிங் மூலம் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் வாயிலாக தேசிய ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், தனது சமூக வலை தளத்தில், 'மக்களைத் தாக்கி வரும் கரோனா வைரஸ் மனிதர்களின் தொடுதல் மூலம் பரவுகிற குணத்தைக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் புதுமையானது. இதனை மருத்துவ உலகம் எதிர்த்துப் போராடி வருகிறது. நிச்சயம் மருத்துவம் வெல்லும்.

இதுபோன்ற நேரத்தில் அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பது தான் கவனிக்கத்தக்கது. கரோனா ஊடரங்கு பிறப்பிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து தான் மக்களை வீட்டுக்குள் அடைத்தது அரசு. அதன் பிறகு "முழு ஊரடங்கு" என்று சொல்லி , மதியம் இரண்டு மணிக்குள் நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க மீண்டும் மார்க்கெட்டுகளிலும், கடைகள் முன்பும் சென்னை மக்கள் பெரும் திரளாகக் கூடினார்கள். முதலமைச்சர் அறிவித்த எக்ஸ்ட்ரா இரண்டு மணி நேர அவகாசமும் யாருக்கும் தெரியவில்லை.

இது எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை என்று புரியவில்லை. பல நாள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த மக்களை, ஒரே நாளில் கூட்டத்திற்குள் நுழைத்து, அந்த பல நாள் பலனை ஒரு நாள் கெடுக்கிற பணி தான் நடந்தது.

இதற்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோது, அது அந்தமான் நிக்கோபார் தீவின் கிழக்கு கடற்கரையைத் தாக்கி, அதன் பிறகு 2 மணி நேரத்திற்குப் பிறகு தான், இந்திய கிழக்கு கடற்கரையைத் தாக்கியது. இந்த 2 மணி நேரத்தில் அரசு சுதாரித்து உயிர் பலியை குறைத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவே நான் கருதுகிறேன்.

கடந்த கால தவறுகளைத் தவிர்த்து இந்த "முழு அடைப்பு" நீடிக்குமா... இல்லையா... , நீடித்தால் கடைகள் திறந்திருக்கும் நேரம். இவைகளை நாளைக்கே அறிவித்தால் தான் மீண்டும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவதைத் தவிர்க்க முடியும்' என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details