இந்தியாவில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. முந்தைய சில மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா - நடிகர் செந்திலின் படங்கள்
சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
senthil
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பாலிவுட்டில் பல முன்னணி நட்சத்திரங்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செந்திலைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.