தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘காசேதான் கடவுளடா’ படப்பிடிப்பில் இணைந்த புகழ்! - cini news

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் “காசேதான் கடவுளடா” ரீமேக் படத்தில், 'குக் வித் கோமாளி' புகழ் இணைந்துள்ளார்.

cook with comali pukazh  cook with comali pukazh shivangi  pukazh shivangi  Kasethan Kadavulad movie remake  Kasethan Kadavulad ramake  director kannan  ukazh joins in the shooting of Kasethan Kadavulada  காசேதான் கடவுளடா படப்பிடிப்பில் இணைந்த புகழ்  குக் வித் கோமாலி புகழ் சிவாங்கி  புகழ் சிவாங்கி  காசேதான் கடவுளடா ரீமேக்  மிர்ச்சி சிவா புதிய படம்  mirchi shiva latest movie  cini news  சினிமா செய்திகள்
புகழ்

By

Published : Jul 26, 2021, 1:39 PM IST

சென்னை: சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில், ஏவிம் தயாரிப்பில், 1972 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “காசேதான் கடவுளடா”.

இந்தப் படத்தை தற்போது "ஜயம்கொண்டான்”, “வந்தான் வென்றான்”, கண்டேன் காதலை”, “சேட்டை” உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.

இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் 'குக் வித் கோமாளி' புகழ் இணைந்துள்ளார். மேலும் புகழ், சிவாங்கி இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளராக கண்ணன், ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் பணிபுரிய உள்ளனர். மேலும் இப்படத்தினை மசாலா பிக்ஸ் சார்பாக கண்ணன் தயாரித்து இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details