தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித் - சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்! - பா.ரஞ்சித்

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீனவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டதாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

sarpatta-parambarai
sarpatta-parambarai

By

Published : Jul 25, 2021, 3:44 PM IST

Updated : Jul 25, 2021, 4:23 PM IST

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித்
ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் மீனவர்களை பா.ரஞ்சித் இருட்டடிப்பு செய்துவிட்டார் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்னை குத்துச்சண்டை களத்தில் கோலோச்சிய சார்பட்டா பரம்பரையில் பல சமுதாயத்தை சார்ந்த வீரர்கள் இருந்தாலும்,வீழ்த்த முடியாத வீரர்களாக நீண்டகாலம் களத்தில் நின்றவர்கள் பெரும்பாலும் மீனவர்கள் தான்என்றும், அவர்கள் குறித்து படத்தில் எதுவும் பதிவிடவில்லை என்றும் கூறப்படுகிறது.
பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித்
பீடி தாத்தா கதாபாத்திரம் சார்பட்டா பரம்பரைக்கு தொடர்பு இல்லாதது போன்று காட்டப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மீனவரான கித்தேரி முத்து உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் குறித்து ரஞ்சித் காட்சிப்படுத்தாதது ஏன் என்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களை ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஆக்கிரமித்துள்ளது.
Last Updated : Jul 25, 2021, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details