கோலிவுட்டில் தனது எதார்த்தமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் சேரன். இயக்கம் தாண்டி தன் படங்களில் தானே நடிக்கத் தொடங்கிய சேரன், தற்போது பிற இயக்குநர்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக சேரன் பகிர்ந்துள்ள ட்வீட் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில் ”அரசியல் காழ்ப்புணர்வுகளோடும், மத இன உணர்வுகளோடும் வெறி கொண்டு அழையும் எவரும் என் நண்பர்களாக இணைய வேண்டாம். நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளைப் பயன்படுத்தும் எவரையும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி மீறி வந்தால் பிளாக் பண்ணத்தான் செய்வேன். அப்பறம் ஸ்கிரீன் ஷாட் போட்டு கதறக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் யாரை மனதில் வைத்து சேரன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் எனப் புரியாமல் அவரைப் பின்பற்றும் நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:பொன்னியின் செல்வன்: ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சி!