தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வீரமே வாகை சூடும்' இளம் நாயகன் அகிலனுக்கு குவியும் பாராட்டு! - இளம் நாயகன் அகிலனுக்கு பாராட்டு

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இளம் நாயகன் அகிலனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

’வீரமே வாகை சூடும்’ இளம் நாயகன் அகிலனுக்கு குவியும் பாராட்டு!
’வீரமே வாகை சூடும்’ இளம் நாயகன் அகிலனுக்கு குவியும் பாராட்டு!

By

Published : Feb 8, 2022, 9:42 PM IST

விஷால் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார், அகிலன்.

படம் முழுக்கப் பயணிக்கும் இக்கதாபாத்திரம், படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மூலம் அறிமுகமான அகிலன், சிறிது சிறிதாக வளர்ந்து நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார்.

அகிலனின் நடிப்புக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தற்போது 'பீட்சா 3' படத்தில் முக்கிய கதாபாத்திரம், வெப்சீரிஸில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படமொன்றில் நாயகனாகவும் அறிமுகமாகிறார். அப்படத்தினை பானுசங்கர் இயக்க, மணிசர்மா இசையமைக்கிறார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

தற்போது சில தமிழ் படங்களில் நாயகன் ஆக நடிக்கவும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க:ஆஸ்கர் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாத 'ஜெய் பீம்'!

ABOUT THE AUTHOR

...view details