அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. பல நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா மாமா, சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய இசை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தன.
இப்பாடல்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள், விருப்பங்களைப் பெற்று சாதனை படைத்துவருகிறது.
இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், “புஷ்பா – தி ரைஸ் என் இசைப் பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார், அல்லு அர்ஜுன், மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி.