தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மித்தாலி ராஜ் பிறந்தநாளில் வெளியான அவரின் பயோபிக் டைட்டில் - த்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mithali Raj
Mithali Raj

By

Published : Dec 3, 2019, 11:55 AM IST

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ராஜஸ்தான் மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் குடிபெயர்ந்து இந்தியாவின் மகளாக வெற்றிவாகை சூடியவர் மித்தாலி ராஜ்.

சிறந்த பேட்ஸ்வுமன், அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் உமன் சச்சின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

மித்தாலி ராஜ்

ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீராங்கணை என்ற பெருமைக்குரிய மித்தாலி, ஒருநாள் விளையாட்டுக்களில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பெண்கள் உலகக்கோப்பை போட்டிக்காக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் படத்தில் நடிகை டாப்ஸி, மித்தாலியாக நடிக்கிறார். வையாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ராகுல் தொலகியா இயக்குகிறார். இந்த நிலையில், இன்று மித்தாலி ராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை சந்தித்த டாப்ஸி, மிதாலியுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

மித்தாலி ராஜ் - டாப்ஸி

மேலும், மித்தாலியின் பிறந்தநாளை முன்னிட்டு டாப்ஸி நடிக்கும் மித்தாலியின் வரலாற்றுப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. 'சபாஷ் மித்து' என்ற பெயருடன் உருவாகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க...

குளுகுளு மணாலியில் அமிதாப் பச்சனின் 'பிரம்மாஸ்த்ரா' படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details