இந்தியில் 90-களில் பிரபல இசை இணையர்களாக வலம் வந்தவர்கள் நதீம் - ஷ்ரவன். இவர்கள் இருவரும் இணைந்து ‘ஆசிகி’ படத்தில் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக உள்ளது.
காலமான பிரபல இசையமைப்பாளர் - உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம்! - music composer shravan died due to covid
இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கரோனா தொற்று காரணமாக நேற்று (ஏப்ரல்.22) உயிரிழந்தார்.
![காலமான பிரபல இசையமைப்பாளர் - உடலை தர மறுத்த மருத்துவமனை நிர்வாகம்! ஷ்ரவன் ரத்தோடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11506017-404-11506017-1619148190075.jpg)
இந்நிலையில் ஷ்ரவனுக்கு கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல்.19) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல்.22) உயிரிழந்ததாக அவரது மகன் சஞ்சீவ் ரத்தோடு தெரிவித்துள்ளார். அவரது உடலை 10 லட்சம் ரூபாய் பணம் கட்டாததால், மருத்துவமனை அலுவலர்கள் தர மறுத்து விட்டதாக முன்பு சஞ்சீவ் தெரிவித்திருந்தார். இவரின் மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.