தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? 'பிகில்' படத்துக்கு அடுத்த சோதனை! - bigil special show

திரையரங்குகள் 'பிகில்' படத்தை திரையிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் 'பிகில்' படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவராஜன் என்ற சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார்.

bigil

By

Published : Oct 23, 2019, 7:57 PM IST

'பிகில்' படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் பெறுவதைத் தடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர் தேவராஜன், சென்னை காவல் ஆணையரிடத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்து வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ள 'பிகில்' படத்தை சிறப்புக் காட்சி என்று கூறிக்கொண்டு, அதிகாலை 4 மணியளவில் படத்தை திரையிட உள்ளார்கள். இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது, அரசாணையை மீறி பல திரையரங்குகள் செயல்படுகின்றது. 'பிகில்' படத்திற்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

விடியற்காலை 4 மணி காட்சி திரையிடுவதையும், கூடுதல் கட்டண வசூலையும் காவல்துறை தடுக்கவேண்டும். அதே நேரத்தில் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற தேவராஜன், இதுபோன்று செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: 'பிகில்' படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details