ஐங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கருணாமூர்த்தி தனது உதவியாளரான பானு என்பவருடன் சேர்ந்து தங்களை ஏமாற்றி சுமார் 120 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவன இயக்குநர் நீலாகாந்த், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீலாகாந்தின் வழக்கறிஞர் ராம் சரண்யா, "லைகா நிறுவனத்தின் ஆலோசகராக கடந்த 2013ஆம் ஆண்டு இணைந்த கருணாமூர்த்தி தனது உதவியாளர் பானு என்பவருடன் இணைந்து, லைகா நிறுவனத்தின் படங்களின் அயல்நாட்டு உரிமத்தை விற்றதிலும், லைகா நிறுவனம் தயாரித்த "கத்தி", "கோலமாவு கோகிலா", "இப்படை வெல்லும்", "தியா", "எமன்" உள்ளிட்ட படங்களின் அதிகப்படியான லாபத்தை கையாடல் செய்ததிலும் சுமார் 90 கோடி ரூபாய் பணத்தை தனது ஐங்கரன் நிறுவன வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், லைகா நிறுவனத்தின் அனுமதியின்றி "வந்தா ராஜாவாதான் வருவேன்" மற்றும் "இந்தியன் -2" உள்ளிட்ட படங்களை தயாரித்து சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.