சென்னை: சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் உலாவந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாகக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதள நாயகனாக நாள்தோறும் மீம்ஸ்களின் மூலம் வலம் வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளார்.
இதையடுத்து தனது முதல் பதிவாகத் தெனாலி ராமன் படத்தில் தோன்றிய கெட்டப்புடன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அக்கவுன்ட் திறக்கச் சொல்லி பலர் கூறினார்கள். என்னிடம் பேங்க் அக்கவுன்ட் இருப்பதாக அவர்களிடம் சொன்னேன்.
பின்னர் ட்விட்டரில் திறக்குமாறு சொன்னார்கள். அது என்ன என்று கேட்டபோது ரசிகர்களிடம் அன்பைப் பரிமாறிக்கொள்ளவதற்குத்தான் என்று தெரிவித்தார்கள். உடனே கடையை திறங்கள் என்று வந்துவிட்டேன். இனி நாம இங்கு அடிக்கடி பேசிக்கலாம்" என்று தனது பாணியில் நகைச்சுவை பொங்கவைக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொலியுடன், "பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்துபோய்விட்டது. அதனால் #ரஜினியைப் போல திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.