தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி தர்பார் நடத்தி வருபவர் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் இணைந்து இவர் நடத்திய காமெடி கலாட்டாக்கள் இன்றுவரை மறக்கமுடியாதது. ஆனால் எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்ட இவர், தற்போது வரை ஹீரோ வேடம் தரித்ததில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு புதுமுக இயக்குநர் இயக்கத்தில் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! - ஹீரோவாக நடிக்கும் செந்தில்
சென்னை: முதல்முறையாக நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
Comedy
இந்நிலையில் ஒரு கிடாரியின் கருணை மனு திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தை சமீரா பரத் ராம் என்பவர் தயாரிக்கிறார்.