தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்! - காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

சினிமாவில் புரொடக்‌ஷன் மேனேஜராகப் பணியாற்றி ஏரளமான படங்களில் காமெடி வேடங்களில் தோன்றிய நடிகர் கிருஷ்ண மூர்த்தி காலமானார்.

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி

By

Published : Oct 7, 2019, 9:27 AM IST

சென்னை: திரைப்பட ஷுட்டிங்கில் பங்கேற்கச் சென்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி, உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடி படங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் குமுளிக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றிருந்த அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

இவர் ரோஜாக்கூட்டம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ரீகாந்தின் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details