தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மெய்யாலுமே ரஜினி காட்சி நீக்கப்படும்பா... 'கோமாளி' தயாரிப்பாளர் உறுதி - ஜெயம் ரவி

'கோமாளி' படத்தில் ரஜினி காந்தின் அரசியல் வருகையை விமர்சித்த காட்சிகள் நீக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

comali

By

Published : Aug 6, 2019, 6:16 PM IST

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'கோமாளி'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தடா என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிரவைக்கிறார்.

கடைசியாக கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு தொலைக்காட்சியில், “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் காணொலியைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

காட்சி நீக்கப்படுவது குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர்

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இணைந்து காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்தக் காணொலியில், கோமாளி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details