வடகொரியா நாட்டில் தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற எந்த அடிப்படை சேவைகளும் வழங்கப்படாமல், சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற விஷயங்களைச் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வடகொரியாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 'Squid Game' வெப் சீரிஸை கல்லூரி மாணவர் ஒருவர் துபாய்க்கு சென்றுவிட்டு பென்டிரைவில் பதிவு ஏற்றம் செய்துவந்து, கல்லூரி மாணவர்களிடம் கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரியவர அந்த மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி, வெப் சீரிஸ் பெற்றுக்கொண்ட ஐந்து இளைஞர்களுக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் Squid game சீரிஸில் வருவது போன்று அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் மரண தண்டனையை வழங்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Maanaadu: லிட்டில் சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்