தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’பிஞ்சு மலரே! மன்னித்துவிடு தாயே..!’ - நடிகர் விவேக் உருக்கம் - DEATH

கோவை: வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விவேக்

By

Published : Mar 31, 2019, 10:27 AM IST

காமெடி நடிகர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விவேக். இவர் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மரம் வளர்த்தல், இன்றைய இளைஞர்கள் செல்ஃபோனில் மூழ்காமல் இயற்கையை பாதுகாப்பது நல்லது என்பதை சொல்வதோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது, சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கும் குரல் கொடுத்து வரும் நடிகர் விவேக், தற்போது கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனது மன வேதனையை பகிர்ந்துள்ளார்.

கோவையில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஞ்சு மலரே! உனக்கு பாதுகாப்பு இல்லாத, வெறி பிடித்த மிருகங்கள் உலவும் சமூகத்தில் நாங்களும் இன்னும் வாழ்வதே பெரும் அவலம் தாயே! (இனியேனும் பெற்றோர் குழந்தைகளை உங்கள் அண்மையிலும், பாதுகாப்பிலும் வையுங்கள்)" என்று இறந்த குழந்தையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details