சென்னை: சீயான் விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இதையடுத்து 'கோப்ரா' பட ஃபர்ஸ்ட் லுக்கில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் தோற்றமளிக்கிறார். முதலில் பார்க்கும்போது இது விக்ரம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்விதமாக ஒவ்வொரு தோற்றமும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது.
'அந்நியன்' படத்துக்குப் பிறகு நீண்ட தலைமுடியுடன் விக்ரமின் ஒரு லுக் அமைந்திருக்க, 3 லுக்குகள் நரைமுடி தாடியுடன் வயதான தோற்றத்திலும், மீதமுள்ள மூன்று தோற்றங்கள் நடுத்தர வயது தோற்றத்திலும் இருப்பதாக உள்ளது. ஒவ்வொரு தோற்றத்துக்கும் இடையேயான வித்தியாசம் ஆச்சர்யம் ஏற்படுத்தும்விதமாக உள்ளது.
'கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து கடந்த இரு நாள்களுக்கு முன் தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து சொன்னபடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் சொல்லவிட்டு 7 வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே 'கோப்ரா' படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் அதிரடியான பின்னணி இசையுடன் வெளியிட்டிருந்தனர். இது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதையடுத்து தற்போது கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது.
'டிமாண்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தில் 'கேஜிஎஃப்' படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகிவரும் 'கோப்ரா' வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க: 'அந்நியன்', 'ஐ' பட வரிசையில் 'கோப்ரா'