நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். இவர் தான் காதலித்து வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இதைத்தொடர்ந்து, குறளரசன்-நபீலா அகமத்தின் திருமண வரவேற்பு வருகின்ற 29ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடக்கிறது. பிரமாண்டமாக நடக்க இருக்கும் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ளுமாறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார் டி. ராஜேந்தர்.
முதல்வர் பழனிசாமி டி.ராஜேந்தர் திடீர் சந்திப்பு
தனது இளைய மகன் குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் டி. ராஜேந்தர் நேரில் சந்தித்தார்.
முதல்வர் பழனிசாமி டி.ராஜேந்தர்
இந்நிலையில் டி.ராஜேந்தர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது, குறளரசனின் திருமண அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார். அவருடன் குறளரசனும் உடனிருந்தார்.
டி.ராஜேந்தர், முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.