சென்னையில் நடிகர் ரகுமானின் மகள் ருஷ்டா ரகுமான் - அல்தாப் நவாப் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது. இத்திருமணத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களுக்குப் பசுமைக் கூடை மரக்கன்றுகளைப் பரிசளித்து வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பல முக்கியமானோர் கலந்துகொண்டனர். மணமகளின் தந்தையான ரகுமான், 'முள்ளே மலரே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் காவல் துறை அலுவலராக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.