தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வேல்ஸ் பிலிம் வெற்றி விழா: முதலமைச்சர் ஈபிஎஸ் பங்கேற்பு! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்தும் வெற்றி விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார்.

cm-edappadi-k-palaniswami

By

Published : Nov 20, 2019, 3:54 PM IST

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆண்டு எல்கேஜி, கோமாளி, பப்பி ஆகிய திரைப்படங்களை தயாரித்தது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த மூன்று படங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில், வரும் 24ஆம் தேதி வெற்றி விழா நடத்த அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் முதலமைச்சர் பழனிசாமி, எல்கேஜி, கோமாளி, பப்பி படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

முதலமைச்சருடன் டாக்டர் ஐசரி கே.கணேஷ் சந்திப்பு

முன்னதாக முதலமைச்சரை நேரில் சந்தித்து வேல்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அழைப்பு விடுத்தார்.

இது குறித்த அழைப்பிதழை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க...

'நாம் இருவரும் நமது குடும்பத்தை பெருமைப்படுத்துவோம்' - நடிகை வனிதா!

ABOUT THE AUTHOR

...view details